இவங்க 2 பேருதான் இந்த வெற்றிக்கு முழுகாரணம்; வெற்றிக்கு பின் விராட் கோலி பரபரப்பு பேட்டி

NewsTN

NewsTN

Author 2019-10-06 17:52:19

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் தற்போது இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் இருக்கிறது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தொடர்ந்து இரண்டு இன்னிங்சில் சதம் அடித்த ரோஹித் சர்மா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

imgThird party image reference

இந்நிலையில் இந்த வெற்றியைதொடர்ந்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, "இந்திய அணியின் இந்த வெற்றிக்கு ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் இருவரும்தான் முக்கிய காரணம். டெஸ்ட் அணி தேர்வில் இதுவரை நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். ரோஹித் சர்மா நான் துவக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலேயே கேட்டார். நான் அதை மறுத்துவிட்டேன்.

ஆனால் தற்போது இந்த போட்டியில் அவர் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி மிகவும் சிறபாக விளையாடினார். மிகப்பெரிய அளவின் இந்திய அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார். அதனால்தான் இந்த போட்டியில் எங்களால் வெற்றிபெறமுடிந்தது.

imgThird party image reference

மேலும் இந்த போட்டியில் அஸ்வின் அவர்கள் 8 விக்கெட்களை வீழ்த்தவில்லை என்றாலும் கண்டிப்பாக இந்த போட்டி சமநிலையில் முடிந்திருக்கும். எனவே இனிவரும் டெஸ்ட் தொடர்களில் இவர்கள் இருவரும் கண்டிப்பாக அணியில் இருப்பார்கள். அடுத்தவருடம் வரும் டெஸ்ட் உலகக்கோப்பை தொடரில் இவர்கள் இருந்தால் கண்டிப்பாக இந்திய அணி கோப்பையை வெல்வது உறுதி", என்று கூறியுள்ளார்

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN