கம்பேக்'னா இப்படி இருக்கனும்!13சிக்ஸர்,2சதம்,303ரன்கள் என ஆட்டநாயகன் விருது வென்ற ஹிட்மேன்

Tamil_Infos

Tamil_Infos

Author 2019-10-06 17:33:19

இந்தியா, தென்னாபிரிக்க அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது, இப்போட்டியில் இந்திய அணிக்கு முதல் முறையாக ஓபனிங்கில் களமிறங்கிய ரோஹித் சர்மா முதல் இன்னிங்சில் 176 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய புள்ளியாக இருந்தார்.

imgThird party image reference

ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அதிரடியாக ஆடி இந்தியாவிற்காக பல வெற்றிகளை தேடித்தந்து துணை கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் மட்டும் மோசமாக ஆடியதால் கடந்த சில ஆண்டுகளாக அணியில் இடம் பிடிக்கவே சிரமப்பட்டு வந்தார், ஆனால் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்ததன் வாயிலாக ஃபார்முக்கு திரும்பி டெஸ்ட் அணியில் இடம்பெற்றார், அத்துடன் இப்போட்டியில் முதல் முறையாக களமிறங்கி ஓபனிங்கில் களமிறங்கி ருத்ர தாண்டவம் ஆடி 25 பவுண்டரிகள் 13 சிக்ஸர்கள், 303 ரன்கள், 2 சதங்கள் என தன் மாஸ் ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார்,

imgThird party image reference

நீண்ட கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரோகித் சர்மா இப்போட்டியில் படைத்த சில சாதனைகள்:

1.142 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே துவக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

2.இப்போட்டியில் 13 சிக்ஸர்கள் அடித்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட வீரர் என்ற பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்(12 சிக்ஸர்கள்) தன்வசம் வைத்திருந்த 23 ஆண்டுகால சாதனையை உடைத்தார்.

imgThird party image reference

3.இது மட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 11 வருடங்களுக்கு பின் ஆட்டநாயகன் வென்ற இந்திய துவக்க வீரர் என்ற சாதனையை முன்னாள் இந்திய வீரர் சேவாக்கிற்குப் பின் படைத்துள்ளார், கடைசியாக சேவாக் கடந்த 2008 ஆம் ஆண்டு துவக்க வீரராக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி நீண்ட நாட்கள் கழித்து டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பி இப்படி பல சாதனைகளை படைத்துள்ள ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள்," கம் பேக்'னா இப்படி இருக்கணும்" என்று கூறுகிறார்கள்.

imgThird party image reference

நண்பர்களே ! டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த துவக்க வீரராக ரோகித் சர்மா விஸ்வரூபம் எடுப்பாரா என்ற உங்கள் கருத்தை கமெண்ட் செய்யவும், மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு Follow செய்யுங்கள், நன்றி.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN