"கோலிதான் எனக்கு கடவுள்" - வெறித்தனமான டேட்டூ ரசிகர்

Indian News

Indian News

Author 2019-10-01 23:29:16

img

உடல் முழுவதும் தன்னுடைய உருவத்தை பச்சை குத்திய ரசிகருடன் கேப்டன் விராட் கோலி ஆசையாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஒடிசாவின் பெஹ்ரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிண்டோ பெஹ்ரா. இவர் விராட் கோலியின் தீவிர ரசிகர்கள். உடலின் பல பகுதிகளில் விராட் கோலியின் உருவத்தை பச்சை குத்தியுள்ளார். இந்திய அணி விளையாடும் போட்டிகளில் பச்சை குத்திய உடலினை காட்டியவாறு மைதானத்தில் வலம் வருவார்.

இந்நிலையில், தன்னுடைய உருவத்தை பச்சை குத்திய ரசிகர் பிண்டோவை விராட் கோலி சந்தித்துள்ளார்.

டேட்டூ ரசிகருடன் விராட் ஆசையாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது, விராட் கோலியின் நெஞ்சில் அந்த ரசிகர்மகிழ்ச்சியில் முத்தமிட்டார்.

பிண்டோ 2016 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய உடலில் பச்சை குத்த ஆரம்பித்தார். விராட் கோலியின் உருவம்தான் முதல் பச்சை. பில்டிங் காண்டிராக்டர் ஆக பணி புரியும் இவர் விராட் கோலி தனக்கு கடவுள் மாதிரி என்று கூறியுள்ளார். நெஞ்சில் விராட் கோலியின் உருவத்தை பச்சைக் குத்தியுள்ள அவர், முதுகில் அவரது ஜெர்ஸி எண் 18-ஐ பச்சை குத்தியுள்ளார். அடுத்ததாக விராட் கோலியின் நூறாவது சதம் பதிவு செய்யப்படும் போது பச்சைக் குத்த உள்ளதாக கூறியுள்ளார்.

Virat kohli Devotees

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN