'ஜூனியர் மலிங்கா' மிரட்டல்
கொழும்பு: 'சீனியர்' மலிங்கா விடைபெற உள்ள நிலையில், இலங்கை அணிக்கு 'ஜூனியர் மலிங்கா' மதீஷா கிடைத்துள்ளார். கல்லுாரி போட்டியில் 7 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்து மிரட்டினார்.
இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 36. கடந்த 2010க்குப் பின் அணியின் ஒரு அங்கம் ஆகிவிட்டார். வித்தியாசமான 'ஆக் ஷனுடன்' வரும் இவரது 'யார்க்கர்' பந்துகளை எதிர்கொள்வது பெரும் சிரமம். டெஸ்ட், ஒருநாள் அரங்கில் விடை பெற்ற மலிங்கா, அடுத்த ஆண்டு 'டுவென்டி-20' உலக கோப்பை தொடருடன் முழு ஓய்வு பெறவுள்ளார்.
இவர் இல்லாத குறையை போக்க வந்துள்ளார் மதீஷா பதிராணா 17. டிரினிட்னி கல்லுாரி அணிக்காக அறிமுக போட்டியில் 7 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்தார்.
தற்போது இலங்கை 19 வயது அணிக்கு தேர்வாகியுள்ள இவர், 'ஜூனீயர் மலிங்கா' ஆக விரைவில் சர்வதேச அரங்கில் மிரட்ட காத்திருக்கிறார்.