'டி 10' தொடரில் யுவராஜ்

Indian News

Indian News

Author 2019-10-25 06:06:13

img

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கவுள்ள 'டி 10' லீக் தொடரில், இந்தியாவின் யுவராஜ் பங்கேற்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங், 37. கடந்த 2007ல் நடந்த 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில், ஒரே ஓவரில் ஆறு சிக்சர் அடித்து சாதனை படைத்தார். கடந்த ஜூன் மாதம் சர்வதேச அரங்கிலிருந்து விடை பெற்றார். ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரில் பஞ்சாப், மும்பை அணிக்காக விளையாடி உள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் வரும் நவம்பர் 14ல் துவங்கும் 'டி 10' லீக் தொடரில் (தலா 10 ஓவர் கொண்ட போட்டி), மராத்தா அரேபியன்ஸ் அணி சார்பில் பங்கேற்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

விண்டீஸ் 'ஆல் ரவுண்டர்' டுவைன் பிராவோ, அணியை வழிநடத்துகிறார். இலங்கையின் மலிங்காவும் அணியில் இடம்பிடித்துள்ளார். யுவராஜ் தனது ஓய்வுக்குப்பின் இரண்டாவது முறையாக லீக் தொடரில் விளையாட உள்ளார். ஏற்கனவே, கனடாவில் நடந்த குளோபல் 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றிருந்தார்.

இது குறித்து யுவராஜ் கூறுகையில்,'' ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கவுள்ள 'டி-10' லீக் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன். மிகப்பெரிய நட்சத்திரங்கள் பங்கேற்கும், மராத்தா அரேபியன்ஸ் சார்பில் பங்கேற்பது மகிழ்ச்சி,'' என்றார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD