'டுவென்டி-20': இலங்கையிடம் வீழ்ந்தது பாக்.,

Indian News

Indian News

Author 2019-10-06 15:18:36

img

லாகூர்: பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 'டுவென்டி-20' போட்டியில் அசத்திய இலங்கை அணி 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி லாகூரில் நடந்தது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு தனுஷ்கா குணதிலகா (57), அவிஷ்கா பெர்ணான்டோ (33) நல்ல துவக்கம் தந்தனர். பானுகா ராஜபக்சா (32), கேப்டன் தசன் ஷனகா (17) ஓரளவு கைகொடுத்தனர். இலங்கை அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.

இசுரு உதானா (5), ஹசரங்கா (7) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் முகமது ஹாஸ்னைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆஸம் (13), அகமது ஷேசாத் (4), உமர் அக்மல் (0) ஏமாற்றினர். கேப்டன் சர்பராஸ் அகமது (24), இப்திகார் அகமது (25) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற, பாகிஸ்தான் அணி 17.4 ஓவரில், 101 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் நுவான் பிரதீப், இசுரு உதானா தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி அக். 7ல் நடக்கவுள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN