'பிக் பாஷ்' தொடரில் டிவிலியர்ஸ்

Indian News

Indian News

Author 2019-10-02 05:17:28

img

சிட்னி: தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் டிவிலியர்ஸ், ஆஸ்திரேலியாவில் நடக்கும் 'பிக் பாஷ்' தொடரில், பிரிஸ்பேன் ஹீட் அணியில் இணைந்துள்ளார்.

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் டிவிலியர்ஸ், 35. மின்னல் வேகத்தில் ரன் சேர்க்கும் திறமை படைத்த இவர், கடந்த ஆண்டு சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்.,, வங்கதேச பிரிமியர் லீக் உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடக்கும் 'பிக் பாஷ்' உள்ளூர் தொடரிலும், கால்பதித்துள்ளார். 2019-2020 சீசனுக்காக (டிச. 17- பிப்.8), பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஒப்பந்தமாகி உள்ளார்.

தொடரின் இரண்டாவது பாதியில் விளையாட உள்ளார். ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக ஜனவரி 9ல் பிரிஸ்பேனில் நடக்கவுள்ள லீக் போட்டியில் அணியுடன் டிவிலியர்ஸ் இணைய வாய்ப்பு அதிகம்.

வயதாகி விட்டது

இது குறித்து டிவிலியர்ஸ் கூறுகையில்,'' ஓய்வு பெற்றபின், குடும்பத்தினருடன் அதிகமான நேரத்தை செலவழித்து வருகிறேன். இதனால், 'பிக் பாஷ்' உள்ளிட்ட முக்கியமான லீக் தொடர்களில் மட்டும் பங்கேற்கும் எண்ணத்தில் உள்ளேன். எனக்கும் வயதாகிவிட்டதால், அதிகமான போட்டிகளில் பங்கேற்க முடியாது,'' என்றார்.

பிரிஸ்பேன் ஹீட் அணி பயிற்சியாளர் டேரன் லேமன் கூறுகையில்,'' டிவிலியர்ஸ் இணைவதால், எங்கள் அணி மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த 'பிக் பாஷ்' தொடர் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்,'' என்றார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN