'வாட்டர் பாய்' ஆன ஆஸி., பிரதமர்

Indian News

Indian News

Author 2019-10-26 05:40:34

img

கான்பெரா: பயிற்சி போட்டியில் 'வாட்டர் பாயாக' மாறி ரசிகர்களை திகைக்க வைத்தார் ஆஸ்திரேலிய அணி பிரதமர் ஸ்காட் மோரிசன்.

ஆஸ்திரேலியா சென்ற இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி நாளை அடிலெய்டில் நடக்கிறது. இதற்கான பயிற்சி போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 131/8 ரன்கள் எடுத்தது. கிரிக்கெட் ரசிகரான பிரதமர் ஸ்காட் மோரிசன் இப்போட்டியை காண வந்திருந்தார். திடீரென ஆஸ்திரேலிய வீரர்கள் அணியும் தொப்பியை அணிந்து கொண்டு, களத்தில் இருந்த தனது அணி வீரர்களுக்கு 'கூல்டிரிங்ஸ்' எடுத்துச் சென்று தந்தார்.

இது வீரர்கள், ரசிகர்களுக்கு திகைப்பை ஏற்படுத்தியது. பிரதமரின் இச்செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு பெற்றது. பின் பிரதமர் லெவன் அணி 19.5 ஓவரில் 132/9 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட்டில் வெற்றி பெற்றது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD