அகாடமி துவங்குகிறார் தோனி

Indian News

Indian News

Author 2019-10-26 22:06:30

img

ராஞ்சி: இந்திய வீரர் தோனி, ராஞ்சியில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவங்க உள்ளதாக தெரிகிறது.

இந்திய கிரிக்கெட்டின் 'சீனியர்' விக்கெட் கீப்பர் தோனி 38. உலக கோப்பை தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார். இந்தியாவுக்கு 'டுவென்டி-20' (2007), ஒருநாள் (2011) என இரு உலக கோப்பை வென்று தந்த இவர் விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இந்துாரில் அகாடமி திறந்த தோனி, அடுத்த இரு மாதத்தில் சிலிகுரியில் திறக்க உள்ளார். ஏற்கனவே டில்லி, பாட்னா, பொகாரோ, நாக்பூர், வாரணாசி உள்ளிட்ட பல இடங்களில் அகாடமி வைத்துள்ளார். இந்த வரிசையில் சொந்தமண்ணில் வளரும் நட்சத்திரங்களுக்கு உதவும் வகையில் புதிய பயிற்சி அகாடமி திறக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக தோனியின் சிறுவயது நண்பர், மானேஜர் மிகிர் திவாகருடன் இணைந்து பொருத்தமான இடத்தை தேடி வருகிறாராம். தவிர விளையாட்டுத் திறனை மேம்படுத்த உள்ளூரில் பள்ளிகளுடன் இணைந்து செயல்படும் திட்டமும் உள்ளதாக தெரிகிறது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN