அசத்துமா ஆஸி.,: இலங்கையுடன் மோதல்

Indian News

Indian News

Author 2019-10-26 21:51:27

img

அடிலெய்டு: ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முதல் 'டுவென்டி-20' போட்டி இன்று நடக்கிறது. ஸ்மித், வார்னர் திரும்புவதால் ஆஸ்திரேலியா அசத்த காத்திருக்கிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கவுள்ளது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை, அடுத்த ஆண்டு (அக். 18-நவ. 15) சொந்த மண்ணில் 'டுவென்டி-20' உலக கோப்பையை நடத்தவுள்ளது. அடுத்த வரும் ஒவ்வொரு போட்டியிலும், 'லெவன்' அணியில் மாற்றம் செய்து, சிறப்பான அணியை உருவாக்க முயற்சிக்கலாம். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், தடையிலிருந்து மீண்ட வார்னர், ஸ்மித் உலக கோப்பை, ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றனர்.

இன்று, இருவரும் சொந்த மண்ணில் நடக்கும் போட்டிக்கு திரும்புகின்றனர். இது, அணிக்கு பலம் சேர்க்கிறது.

கேப்டன் ஆரோன் பின்ச், கீப்பர் கேரி கைகொடுக்கலாம். கடந்த உலக கோப்பையில் ஏமாற்றிய மேக்ஸ்வெல் (10 போட்டி, 177 ரன்) இழந்த 'பார்மை' மீட்டால் நல்லது. 'வேகத்தில்' ஸ்டார்க், கம்மின்ஸ் என அபாயகரமாக கூட்டணி இருக்கிறது. முழங்கை காயம் காரணமாக ஆன்ட்ரூ டை விலகியதால், கேன் ரிச்சர்ட்சன் இடம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 'சுழலில்' ஜாம்பா மட்டுமே உள்ளார்.

மலிங்கா மிரட்டுவாரா

இலங்கை அணி, இந்த ஆண்டில் தொடர்ந்து மூன்று 'டுவென்டி-20' தொடரை பறிகொடுத்தது. இதன்பின், இளம் வீரர்கள் கொண்ட அணி பாகிஸ்தான் மண்ணில் 'டுவென்டி-20' தொடரை கைப்பற்றி அசத்தியது. பாகிஸ்தானுக்கு எதிராக நம்பிக்கை அளித்த பானுகா, தனுஷிகா குணதிலகா, ஒசாகா பெர்னாண்டோ மிரட்டலாம். 36 வயதிலும், 'ஹாட்ரிக்' (எதிர்-நியூசி.,) சாதனை படைத்த வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா, கேப்டன்ஷிப்பிலும் கைகொடுக்க காத்திருக்கிறார். உடானா, நுவன் பிரதீப் விக்கெட் வேட்டைக்கு உதவலாம்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD