அசத்துவாரா ரோகித் சர்மா * பயிற்சி போட்டி துவக்கம்

Indian News

Indian News

Author 2019-09-26 02:52:19

img

விஜயநகரம்: இந்தியா லெவன், தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் மூன்று நாள் பயிற்சி போட்டி இன்று துவங்குகிறது. கேப்டன், துவக்க வீரராக களமிறங்கும் ரோகித் சர்மா, இதில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய கிரிக்கெட் போர்டு பிரசிடென்ட் லெவன் அணியுடன், தென் ஆப்ரிக்க அணி மூன்று நாள் பயிற்சி போட்டியில் மோதுகிறது.

ரோகித் துவக்கம்

ஆந்திராவின் விஜயநகரத்தில் இன்று துவங்கும் இப்போட்டியில் போர்டு லெவன் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.

லோகேஷ் ராகுல் சொதப்பல், பிரித்வி ஷா தடை காரணமாக வேறு வழியில்லாத நிலையில் மயங்க் அகர்வாலுடன் இணைந்து, டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக துவக்க வீரராக களமிறங்க ரோகித்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஒருநாள் (48.52) அரங்கில் 3 இரட்டை சதம் (264, 209, 208) விளாசிய இவரது டெஸ்ட் சராசரி 39.62 ரன்னாக (27 போட்டி) மட்டும் உள்ளது. தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பெறலாம்.

ஒருவேளை ரோகித் ஏமாற்றினால், பிரியங்க் பன்சால், ஈஸ்வரன் என மீண்டும் புதியவர்களை இந்திய அணி தேட நேரிடும். மற்றபடி இன்றைய போட்டியில் கருண் நாயர், சக்சேனா உள்ளிட்டோர் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பவுலிங்கை பொறுத்தவரையில் பும்ராவுக்குப் பதில் சேர்க்கப்பட்ட உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், இஷான் போரல் உள்ளிட்டோர் கைகொடுப்பர் என நம்பலாம்.

டுபிளசி கேப்டன்

தென் ஆப்ரிக்க அணிக்கு டுபிளசி கேப்டனாக களம் காண்கிறார். இவருடன் பவுமா, 'டுவென்டி-20' தொடரில் மிரட்டிய குயின்டன் டி காக், டீன் எல்கர், மார்க்ரம் கூட்டணி பேட்டிங்கில் அச்சுறுத்தல் தர முயற்சிக்கும். பவுலிங்கில் ரபாடா, பிலாண்டர், லுங்கிடி என அனுபவ 'வேகங்களுடன்', கேஷவ் மஹராஜ், டேன் பைடிட் பந்தை சுழற்ற தயாராக உள்ளனர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN