அசார் புதிய தலைவர்

Indian News

Indian News

Author 2019-09-28 04:26:23

img

ஐதராபாத்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் (எச்.சி.ஏ.,) புதிய தலைவராக முன்னாள் கேப்டன் முகமது அசார் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் முகமது அசார் 56. மொத்தம் 99 டெஸ்ட், 334 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார். 2000ல் வெடித்த சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார். இவருக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வாழ்நாள் தடை விதித்தது.

இதை எதிர்த்து கோர்ட்டில் அப்பீல் செய்து வெற்றி பெற்றார். உ.பி.,யின் மொரதாபாத் பார்லிமென்ட் தொகுதி எம்.பி., ஆகவும் இருந்தார். தற்போது மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் நடக்கிறது. எச்.சி.ஏ., தலைவர் பதவிக்கு அசார் விண்ணப்பித்தார்.

இதற்கான தேர்தலில் 173 ஓட்டுகள் பெற்று அசார் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ் சந்த் ஜெயினுக்கு 73 ஓட்டுகள் கிடைத்தன.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN