அலிசா ஹீலி '100'

Indian News

Indian News

Author 2019-10-01 06:05:42

img

சிட்னி: இலங்கைக்கு எதிராக களமிறங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி, தனது 100வது சர்வதேச 'டுவென்டி-20' போட்டியில் விளையாடினார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி சிட்னியில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி (87/1, 9.4 ஓவர்) 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை (84/8, 20 ஓவர்) வீழ்த்தியது. இதனையடுத்து 2-0 என தொடரை கைப்பற்றியது.

இப்போட்டி ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி பங்கேற்ற 100வது சர்வதேச 'டுவென்டி-20' போட்டி.

இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 9வது சர்வதேச வீராங்கனையானார். அதிகபட்சமாக நியூசிலாந்தின் சுசீ பேட்ஸ் 111 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆஸ்திரேலியா சார்பில் இந்த இலக்கை எட்டிய 2வது வீராங்கனை என்ற பெருமை பெற்றார். ஏற்கனவே எலிஸ் பெர்ரி, 110 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இந்தியா சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், அதிகபட்சமாக 97 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN