அலிசா ஹீலி சாதனை சதம்: ஆஸி., பெண்கள் கலக்கல் வெற்றி

Indian News

Indian News

Author 2019-10-03 00:10:37

img

சிட்னி: இலங்கைக்கு எதிரான 3வது பெண்கள் 'டுவென்டி-20' அலிசா ஹீலி சதம் கடந்து கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் விளையாடியது. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. சிட்னியில், 3வது போட்டி நடந்தது.

'டாஸ்' வென்ற முதலில் 'பேட்டிங்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி நல்ல துவக்கம் தந்தார். இலங்கை பந்துவீச்சை வெளுத்துவாங்கிய இவர், 61 பந்தில், 7 சிக்சர், 19 பவுண்டரி உட்பட 148 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில், 2 விக்கெட்டுக்கு, 226 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி அட்டபட்டு (30), ஹர்ஷிதா மாதவி (28) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற இலங்கை அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 94 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 3-0 என, தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

ஹீலி சாதனை

அபாரமாக ஆடிய அலிசா ஹீலி 148 ரன் விளாசினார். இதன்மூலம் சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீராங்கனையானார். இதற்கு முன், கேப்டன் மேக் லானிங் 133 ரன் (எதிர்: இங்கிலாந்து, 2019) எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

* இவர், 46 பந்தில் சதமடித்தார். இதன்மூலம் சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் அதிவேகமாக சதமடித்த வீராங்கனைகள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் விண்டீசின் டாட்டின் (38 பந்து, எதிர்: தென் ஆப்ரிக்கா, 2010) உள்ளார்.

* தவிர இவர், சர்வதேச 'டுவென்டி-20'யில் அதிவேகமாக சதமடித்த ஆஸ்திரேலிய நட்சத்திரமானார். இதற்கு முன், ஆரோன் பின்ச் 47 பந்தில் சதமடித்திருந்தது (எதிர்: இங்கிலாந்து, 2013) அதிகவேக சதமாக இருந்தது.

* ஒட்டுமொத்த சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பரானார் அலிசா ஹீலி. இதற்கு முன், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் 123 ரன் (எதிர்: வங்கதேசம், 2012) அதிகபட்ச ரன்னாக இருந்தது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN