அஸ்வின் 7 விக்கெட் ! தென்னாப்பிரிக்கா ஆல் அவுட்

Puthiyathalaimurai

Puthiyathalaimurai

Author 2019-10-07 19:52:41

img

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தென்னாப்பிரிக்கா 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ரோகித் 176 ரன்களும் மயங்க் அகர்வால், 215 ரன்களும் குவித்தனர்.

முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 431 ரன்னுக்கு ஆல் அவுட்டான ஆன நிலையில், இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD