ஆப்கனை வென்றது விண்டீஸ்

Indian News

Indian News

Author 2019-11-07 03:41:16

img

லக்னோ: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஹோப், சேஸ் அசத்த விண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவை சொந்த மண்ணாக கொண்டு விளையாடி வருகிறது. இங்கு வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி லக்னோவில் நடந்தது. 'டாஸ்' விண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு 'வேகங்கள்' தொல்லை தந்தனர். காட்ரல் பந்தில் ஜத்ரன் (9) சிக்கினார். ஜாவத் அகமது (5), நஜிபுல்லா (0) ஏமாற்றினர். ரஹ்மத் ஷா (61), இக்ராம் (58) அரை சதம் அடித்து ஆறுதல் தந்தனர்.

கேப்டன் ரஷித் கான் டக் அவுட்டானார். ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவரில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் உள்ளிட்டோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

விண்டீஸ் அணிக்கு லீவிஸ் (7), ஹெட்மயர் (3) ஒற்றை இலக்கில் திரும்பினர். ஹோப், ரோஸ்டன் சேஸ் ஜோடி அசத்தியது. இருவரும் அரை சதம் கடந்தனர். சேஸ் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். விண்டீஸ் அணி 46.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹோப் (77), பூரன் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD