ஆப்கானிஸ்தானை போராடி வென்றது வெஸ்ட் இண்டீஸ்!

Indian News

Indian News

Author 2019-11-07 02:03:07

img

ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆப்கனிஸ்தான் அணிக்கு ரஹ்மத் ஷா (61), இக்ரம் அலிகில் (58), அஸ்கர் ஆஃப்கன் (35) மூவரும் சிறப்பாக ஆடினாலும், மற்ற வீரர்கள் சோதப்பியதால் ஆப்கானிஸ்தான் 194 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் லீவிஸ் 7 ரன்களுக்கும், ஹெட்மையர் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

3-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் - ராஸ்டன் சேஸ் இருவரும் ஜோடி சேர்ந்து, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு ரன் சேர்த்தனர்.

இதில் ராஸ்டன் சேஸ் துரதிஷ்டவசமாக 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ஷாய் ஹோப் 77 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க, இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 46.3 ஓவரில் 3 விகெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN