ஆறுதல் தந்த ஜடேஜா * மார்க்ரம் சதம்

Indian News

Indian News

Author 2019-09-27 22:22:09

img

விஜயநகரம்: இந்திய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவின் மார்க்ரம் சதம் அடித்தார். இந்தியா சார்பில் தர்மேந்திரசின் ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தி ஆறுதல் தந்தார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்டில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் அக். 2-6ல் விசாகப்பட்டனத்தில் துவங்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிராக மூன்று நாள் பயிற்சி போட்டியில் மோதுகின்றன.

இந்திய லெவன் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக களமிறங்கினார். ஆந்திராவின் விஜயநகரத்தில் நடக்கும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழை காரணமாக ரத்தானது.

மழை தொல்லை தர இரண்டாவது நாள் ஆட்டம் தாமதமாக துவங்கியது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி பேட்டிங் தேர்வு செய்தார்.

உமேஷ் நம்பிக்கை

தென் ஆப்ரிக்க அணிக்கு எல்கர், மார்க்ரம் ஜோடி துவக்கம் தந்தது. பும்ராவுக்குப் பதில் இடம் பெற்ற உமேஷ் யாதவ், எல்கரை (6) வெளியேற்றினார். 'ஜூனியர்' பவுலர் இஷான் போரல் 'வேகத்தில்' புருய்ன் (6) சிக்கினார்.

ஜடேஜா ஆறுதல்

சுழலில் சிறப்பாக செயல்பட்ட தர்மேந்திரசின் ஜடேஜா (ராஜ்கோட்), முதலில் ஜுபைரை (22) வீழ்த்தினார். பின் மார்க்ரம், பவுமா இணைந்தனர். வேகமாக ரன்கள் சேர்த்த மார்க்ரம், பவுண்டரி மழை பொழிந்தார். இவர் மார்க்ரம் 118 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து 'ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் திரும்பினார்.

பவுமா அரைசதம் எட்டினார். மீண்டும் வந்த ஜடேஜா, கேப்டன் டுபிளசியை (9) அவுட்டாக்கினார். 50 ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது.

ஜடேஜா 2, உமேஷ் யாதவ், இஷான் போரல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN