ஆலோசகராக மைக்கேல் ஹசி

Indian News

Indian News

Author 2019-10-21 07:13:45

img

சிட்னி: இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசகராக மைக்கேல் ஹசி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா செல்லும் இலங்கை (அக். 27, 30, நவ. 1), பாகிஸ்தான் (நவ. 3, 5, 8) அணிகள் தலா 3 போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக முன்னாள் 'மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேன் மைக்கேல் ஹசி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆஸ்திரேலியாவுக்காக 79 டெஸ்ட் (6235 ரன்கள்), 185 ஒருநாள் (5442 ரன்கள்), 38 சர்வதேச 'டுவென்டி-20' (721 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இதேபோல இத்தொடருக்கு பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரியான் ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆலோசகராக செயல்பட்டார். இதுபோல, சமீபத்தில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் ஆலோசகராக இருந்தார்.

இதுகுறித்து மைக்கேல் ஹசி கூறுகையில், ''மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைய இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது,'' என்றார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD