ஆஷஸ் டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா?

Dhinasari

Dhinasari

Author 2019-09-12 04:13:09

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா மோதும் 5வது மற்றும் கடைசி போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. பாரம்பரியமிக்க இந்த தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை பெற்றதுடன் ஆஷஸ் குடுவையையும் தக்கவைத்துக் கொண்டது. அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் 3 போட்டியில், 5 இன்னிங்சில் 671 ரன் (அதிகம் 211, சராசரி 134.20, சதம் 3, அரை சதம் 2) குவித்து மிகச் சிறந்த பார்மில் உள்ளார். ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையிலும் விராத் கோஹ்லியை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 அந்தஸ்தை மீண்டும் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடைசி டெஸ்டில் வென்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. அதே சமயம், இந்த போட்டியில் வெற்றியை வசப்படுத்தி தொடரை சமன் செய்ய இங்கிலாந்தும் முயற்சி செய்வதால், ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD