ஆஸ்திரேலிய வீரர்களைத் திகைக்க வைத்த ஸ்காட் மோரிசன்!

Indian News

Indian News

Author 2019-10-25 11:14:22

img

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் நேற்று பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. அதில் இலங்கை அணியும், ஆஸ்திரேலியா சார்பில் ஆஸ்திரேலிய பிரதமர் XI அணியும் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய பிரதமர் XI அணி 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை இலங்கை தொடங்கிய போது மைதானத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. நேற்றைய போட்டியைக் காண ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மைதானத்துக்கு வந்திருந்தார். போட்டியைக் கண்டுகொண்டிருந்தவர் இரண்டாவது இன்னிங்ஸில் 16வது ஓவரின்போது திடீரென மைதானத்துக்குள் புகுந்தார்.

அதுவும் தனது டீமின் தொப்பியை அணிந்துகொண்டு பிரதமர் என்பதையும் மறந்து கையில் வாட்டர் பாட்டில்களுடன் மைதானத்திற்குள் இறங்கியவர் வீரர்களுக்கு வாட்டர் சப்ளை செய்தார்.

ஆட்சிக்கவிழ்ப்பு புகழ் ஆஸ்திரேலியா… மீண்டும் பிரதமரானார் ஸ்காட் மோரிசன்! மோரிசனின் செயலைக் கண்ட மைதானத்தில் இருந்தவர்கள் உட்பட அனைவரும் ஆரவாரம் செய்து அவருக்குப் பாராட்டு தெரிவித்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD