இங்கிலாந்துக் குழாமிலிருந்து பெயார்ஸ்டோ நீக்கம்

Indian News

Indian News

Author 2019-09-24 20:45:05

img

நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்துக் குழாமிலிருந்து விக்கெட் காப்பாளர் ஜொனி பெயார்ஸ்டோ நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் டொம் சிப்லி, ஸக் க்றோலி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் சகிப் மஹ்மூட், சுழற்பந்துவீச்சாளர் மற் பார்க்கின்ஸன் ஆகியோர் முதற்தடவையாக இங்கிலாந்துக் குழாமொன்றில் இடம்பெற்றுள்ளனர்.

ஆஷஸின் இறுதி டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து அணியிலிருந்து பெயார்ஸ்டோ மாத்திரம் இக்குழாமில் இடம்பெற்றிருக்காத நிலையில், அப்போட்டிக்கான குழாமில் இடம்பெற்றிருந்த துடுப்பாட்டவீரர் ஜேஸன் றோயும் தற்போதைய இங்கிலாந்துக் குழாமில் இடம்பெறவில்லை. துடுப்பாட்டவீரர் ஒலி போப் தற்போதைய இங்கிலாந்துக் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், பெயார்ஸ்டோ இல்லாத நிலையில், பென் ஃபோக்ஸும் இங்கிலாந்துக் குழாமில் இடம்பெறாத நிலையில், விக்கெட் காப்பில் ஜொஸ் பட்லர் ஈடுபடவுள்ளதாகத் தெரிகிறது.

குழாம்: ஜோ றூட் (அணித்தலைவர்), ஜொவ்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் ப்ரோட், றோறி பேர்ண்ஸ், ஜொஸ் பட்லர், ஸக் க்றோலி, சாம் கர்ரன், ஜோ டென்லி, ஜேக் லீச், சகிப் மஹ்மூட், மத்தியூ பார்க்கின்ஸன், ஒலி போப், டொமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

இதேவேளை, நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சகிப் மஹ்மூட், மத்தியூ பார்க்கின்ஸனுடன், துடுப்பாட்டவீரர் டொம் பன்டன், வேகப்பந்துவீச்சாளர் பற் ப்றோண், லூயிஸ் கிறேகரி ஆகிய புதுமுக வீரர்களுடன் சாம் கர்ரன், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இக்குழாமில் ஜோ றூட், ஜொஸ் பட்லர், ஜொவ்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், ஜேஸன் றோய், மொயின் அலி உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதுடன், வேகப்பந்துவீச்சாளர் லியம் பிளங்கெட் இக்குழாமில் இடம்பெறவில்லை.

குழாம்: ஒய்ன் மோர்கன் (அணித்தலைவர்), ஜொனி பெயார்ஸ்டோ, டொம் பன்டன், சாம் பில்லிங்ஸ், பற் ப்றோண், சாம் கர்ரன், டொம் கர்ரன், ஜோ டென்லி, லூயிஸ் கிறேகரி, கிறிஸ் ஜோர்டான், சகிப் மஹ்மூட், டேவிட் மலன், மற் பார்க்கின்ஸன், அடில் ரஷீட், ஜேம்ஸ் வின்ஸ்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN