இந்தியன் சூப்பர் லீக் - கேரளாவை வீழ்த்திய ஐதராபாத் | ISL | Football

Indian News

Indian News

Author 2019-11-03 07:16:00

'ஐ.எஸ்.எல்' எனப்படும், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. 10 அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டத்தில் ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ், ஐதராபாத் எப்.சி அணிகள் மோதின.

கேரளா அணியின் ராகுல் 34-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கேரளா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் ஐதராபாத் அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அந்த அணியின் ஸ்டன்கோவிக் 54வது நிமிடத்திலும், பெரைரா 81வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இறுதியில், ஐதராபாத் அணி 2-1 என கேரளா அணியை வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD