இந்தியாவில் 'வங்கதேசம்'
புதுடில்லி: இந்திய அணிக்கு எதிரான மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, வங்கதேச அணி டில்லி வந்தது.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி வரும் நவம்பர் 3ல் டில்லியில் நடக்கவுள்ளது. அடுத்த இரண்டு போட்டிகள் முறையே ராஜ்கோட் (நவ.7), நாக்பூரில் (நவ.10) நடக்கும். இதில் பங்கேற்கவுள்ள 15 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி நேற்று டில்லி வந்தடைந்தது.
வங்கதேச கேப்டன் மகமதுல்லா கூறுகையில்,'' எங்களின் தேசத்திற்காக விளையாட வந்துள்ளோம். இந்தியாவுக்கு எதிராக இதுவரை மோதிய போட்டிகளின் விவரத்தை நன்றாக அறிவேன்.
சீனியர் வீரர் முஷ்பிகுர் கூறுகையில்,'' சாகிப் 'நம்பர்-1' வீரராக திகழ்கிறார். திடீரென இவர் அணியில் இல்லாதது வருத்தம். இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது கடினமான சவால்,'' என்றார்.