இந்தியா 'பி' அணி வெற்றி: அபராஜித், ருதுராஜ் சதம்

Indian News

Indian News

Author 2019-10-31 23:40:56

img

ராஞ்சி: இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான தியோதர் டிராபி லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாத், பாபா அபராஜித் சதம் கடந்து கைகொடுக்க இந்தியா 'பி' அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், தியோதர் டிராபி (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் முதல் லீக் போட்டியில் இந்தியா 'ஏ', இந்தியா 'பி' அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்தியா 'ஏ' அணி கேப்டன் விஹாரி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

இந்தியா 'பி' அணிக்கு பிரியங்க் பஞ்சால் (3) ஏமாற்றினார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (31) நிலைக்கவில்லை.

பின் இணைந்து அபாரமாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாத் (113), பாபா அபராஜித் (101) சதம் கடந்தனர். கேதர் ஜாதவ் (5), விஜய் சங்கர் (26) சோபிக்கவில்லை. இந்தியா 'பி' அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்தது. கிருஷ்ணப்பா கவுதம் (19) அவுட்டாகாமல் இருந்தார்.

கடின இலக்கை விரட்டிய இந்தியா 'ஏ' அணிக்கு தேவ்தத் (10), அபிமன்யு ஈஸ்வரன் (20), விஷ்னு வினோத் (11) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் ஹனுமா விஹாரி (59) ஆறுதல் தந்தார். இஷான் கிஷான் (26), அஷ்வின் (0) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர்.

இந்தியா 'ஏ' அணி 47.2 ஓவரில், 194 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. சித்தார்த் கவுல் (7) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா 'பி' அணி சார்பில் ரூஷ் கலாரியா 3 விக்கெட் கைப்பற்றினார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD