இந்தியா - தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்

Puthiyathalaimurai

Puthiyathalaimurai

Author 2019-10-02 20:22:47

img

இந்தியா - தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இன்று காலை விசாகபட்டினத்தில் தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

img

முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 36 டெஸ்ட் ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில், தென்னாப்பிரிக்கா 15 போட்டியிலும், இந்தியா 11 போட்டியிலும் வென்றுள்ளன. 10 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.

இன்று முதல் 6 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் தொடரும் 10ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை புனேயில் இரண்டாவது டெஸ்ட் தொடரும் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ராஞ்சியில் மூன்றாவது டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN