இந்தியா - வங்கதேசம்: முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்

Indian News

Indian News

Author 2019-11-03 13:47:07

img

இந்தியா - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிகள் இன்று மாலை டெல்லியில் தொடங்க இருக்கிறது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. மூன்று சுற்றுகள் கொண்ட டி20 போட்டிகளும், இரண்டு சுற்றுகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளும் நடைபெற இள்ளது. இதற்காக வங்கதேச அணி வீரர்கள் இரண்டு நாட்கள் முன்னதாகவே இந்தியா வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஓய்வில் இருப்பதால், இந்த டி20 தொடரை ரோகித் ஷர்மா கேப்டனாக வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் புதிய வீரர்கள் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த உலக கோப்பைக்கான வீரர்கள் தேர்வை பிசிசிஐ இப்போதிருந்தே தொடங்க இருப்பதால், புதிய வீரர்கள் தங்கள் திறமைகளை காட்ட ஆயத்தமாகி வருகின்றனர். வங்கதேச அணி பலவீனமான நிலையில் உள்ளது. சில வீரர்கள் நன்றாக ஆட கூடியவர்கள் என்றாலும் அணியை சிறப்பாக வழிநடத்தக்கூடிய கேப்டன் அல் ஹசன் சூதாட்ட பிரச்சினையில் விலக்கப்பட்டுள்ளதால் புதிய கேப்டன் வழிநடத்தலில் வங்கதேசம் விளையாட வேண்டிய கட்டாயம்.

வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகளை வென்றது போல வங்கதேச அணியையும் இந்தியா எளிதில் வெற்றி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD