இந்திய 'வேகங்களுக்கு' சபாஷ் * பிரையன் லாரா பாராட்டு

Indian News

Indian News

Author 2019-10-18 02:59:39

img

மும்பை: ''இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பார்க்கும் போது, 1980-90களில் இருந்த விண்டீஸ் அணியின் 'வேகங்கள்' நினைவுக்கு வருகின்றனர்,'' என லாரா தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட்டில் சமீப காலமாக வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட மண்ணில் இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது. கடந்த 2018ல் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா இணைந்து 142 விக்கெட் வீழ்த்தி சாதித்தனர்.

இதுகுறித்து விண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியது:

சமீபகாலமாக சர்வதேச அரங்கில் இந்திய அணி சிறப்பான வெற்றிகள் பெறுகிறது.

இதற்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் முக்கிய காரணம். நம்ப முடியாத அளவுக்கு அசத்துகின்றனர். பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் என அனைவரும் சிறப்பாக செயல்படுகின்றனர். இதைப் பார்க்கும் போது, கடந்த 1980-90களில் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய விண்டீஸ் அணியின் 'வேகங்கள்' தான் நினைவுக்கு வருகின்றனர்.

கோஹ்லி சிறந்த கேப்டனாக உள்ளார். இவரது பேட்டிங் திறன் மற்றும் களத்தில் அணியை முன்னெடுத்துச் செல்லும் திறமை அபாரமாக உள்ளது. தவிர களத்தில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியிலும் நம்பிக்கை தருகிறார். தோனியின் அரவணைப்பில் கோஹ்லி நன்கு வளர்ந்துள்ளார்.

மொத்தத்தில் இந்திய கிரிக்கெட் சரியான வழியில் சென்று கொண்டுள்ளது.

மூன்று வித கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மா, வியக்கத்தக்க வீரராக திகழ்கிறார். ஒருநாள் மற்றும் 'டுவென்டி-20' அரங்கில் வெற்றிகரமாக செயல்படுகிறார். டெஸ்டிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள இவரை, அணியில் சேர்க்காமல் இருப்பதற்கு எவ்வித காரணமும் இருப்பதாக தெரியவில்லை.

ரோகித் சர்மா போன்ற வீரர்களை டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்றுவது கடினம். பேட்டிங் என்பது இயற்கை இவருக்கு கொடுத்த பரிசு. டெஸ்டிலும் இவர் சாதிப்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN