இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு

Indian News

Indian News

Author 2019-10-12 13:30:00

img

புனே: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துகிறது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இரண்டாவது டெஸ்ட் மகாராஷ்டிராவின் புனேயில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 601/5 ரன்களுக்கு 'டிக்ளேர்' செய்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. புருய்ன் (20), நாட்ஜே (2) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடக்கிறது. ஷமி 'வேகத்தில்' நாட்ஜே (3) அவுட்டானார். உமேஷ் பந்தில் புருய்ன் (30) வெளியேறினார். பின், இணைந்த கேப்டன் டுபிளசி, குயின்டன் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த டுபிளசி அரை சதம் கடந்தார். அஷ்வின் 'சுழலில்' குயின்டன் (31) ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின்போது,, தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்து, 465 ரன்கள் பின்தங்கி இருந்தது. டுபிளசி (52), முத்துசாமி (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD