இந்திய அணி பந்து வீச்சில் திணறி வரும் தென் ஆப்பிரிக்கா...!

Indian News

Indian News

Author 2019-10-21 22:46:10

img

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி போராடி வருகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா இரட்டை சதமும் ரஹானே சதமும் அடித்து அசத்தினர்.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணி பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் ஃபாலோ ஆன் பெற்ற தென்னாப்பிரிக்கா அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்திருந்தது. 2வது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டி காக் 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். அவருடன் ஆட வந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து வந்த ஹம்ஷா, டூப்பிலசீஸ் ,புவாமா ஆகியோர் ஷமி வேகத்தில் சிக்கி அடுத்தடுத்து வெளியேறினர். அணியை சரிவில் இருந்து தூக்கி நிறுத்தவார் என எதிர்பார்க்கப்பட்ட க்லாசன் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

அவரை தொடர்ந்து களம் இறங்கிய லிண்டே மற்றும் பைஎட் ஆகியோர் இரட்டை இலக்கு ரன்களை எட்டிய போது லிண்டே 27 ரன்களில் ரன் அவுட் ஆனார். அணியை சரிவில் இருந்து மீட்க போராடி வரும் ப்ரூயின் 30 ரன்களுடன் நார்ட்ஜே 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி, 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. தோல்வியின் விளிம்பில் உள்ள தென் ஆப்பிரிக்க அணி, இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ள நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN