இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் அசாருதீன்!

Indian News

Indian News

Author 2019-09-28 02:20:57

img

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 173 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் படி ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், பிரகாஷ் சந்த் ஜெயின் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் முகமது அசாருதீன் 173 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ் சந்த் ஜெயின் 73 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். முகமது அசாருதீன் இந்தியாவின் கேப்டனாகவும், சிறந்த வீரராகவும் விளங்கிய நேரத்திலே சூதாட்ட பிரச்சனையில் சிக்கி தடைபெற்றவர் ஆவார்.

அவருக்கான தடை கடந்த 2012 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. அவருக்கு தற்போது 56 வயதாகிறது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN