இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி * ஹர்மன்பிரீத் அபாரம்

Indian News

Indian News

Author 2019-09-25 02:17:19

img

சூரத்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 43 ரன்கள் எடுத்தார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க பெண்கள் அணி, ஐந்து 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.இரு அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று குஜராத்தின்சூரத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் 15 வயது ஷபாலி வர்மா அறிமுகம் ஆனார்.

ஷபாலி 'ஷாக்'

இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது.

முதல் ஓவரை எதிர்கொண்ட ஷபாலி, நான்காவது பந்தில் 'டக்' அவுட்டாகி 'ஷாக்' கொடுத்தார். மந்தனா, ஜெமிமா இணைந்தனர்.

ஷப்னிம் பந்தை ஜெமிமா பவுண்டரிக்கு அனுப்பிய போதும், 4 ஓவரில் இந்தியா 11/1 ரன் மட்டும் எடுத்தது. பின் வேகம் எடுத்தார் மந்தனா. டுமி ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். ஷாங்கசே வீசிய போட்டியின் 6வது ஓவரில் முதல் இரு பந்துகளில் பவுண்டரி அடித்த மந்தனா (21 ரன்), அடுத்த பந்தில் 'கேட்ச்' கொடுத்தார்.

குறைந்த ஸ்கோர்

இதன் பின் அணியின் ஸ்கோர் வேகம் மீண்டும் மந்தம் ஆனது. பின் சுனே லஸ் வீசிய பந்தில் இப்போட்டியின் முதல் சிக்சர் அடித்தார் ஹர்மன்பிரீத் கவுர். பந்துகளை வீணடித்த ஜெமிமா 19 ரன்னுக்கு (25 பந்து) வீழ்ந்தார்.

மறுபக்கம் மிலபா பந்தையும் சிக்சருக்கு விரட்டினார் ஹர்மன்பிரீத் கவுர். அடுத்து மிலபா ஓவரில் இவர் இரண்டு பவுண்டரி அடிக்க இந்திய அணியின் ஸ்கோர் 15 ஓவரில் 102/3 ரன்களை எட்டியது. இதன் பின் திடீர் சரிவு ஏற்பட்டது.

தீப்தி சர்மா (16) அவுட்டான சில நிமிடத்தில் ஹர்மன்பிரீத் கவுர் 43 ரன்னுக்கு அவுட்டாகி திரும்பினார். பூஜா, ராதா இருவரும் தலா 1 ரன் எடுத்தனர். வேதா 10 ரன்னுக்கு கிளம்பினார். இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது. தானியா (11), ஷிகா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

எளிய இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணியின் 'டாப் ஆர்டர்' விரைவில் சரிய, 73 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. மனம் தளராமல் போராடிய டு பிரீஸ் அரைசதம் எட்டினார். ராதா வீசிய கடைசி ஓவரில் 18 ரன் தேவைப்பட்டது.

முதல் பந்தில் சிக்சர் அடித்த டு பிரீஸ் (59), 4வது பந்தில் அவுட்டானார். அடுத்து மிலபா (0) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 19.5 ஓவரில் 119 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா 11 ரன்னில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3, ஷிகா, பூனம், ராதா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

2

இந்திய கிரிக்கெட்டில் இளம் வயதில் அறிமுகம் ஆன இரண்டாவது நட்சத்திரம் ஆனார் ஷபாலி வர்மா (15 வயது, 239 நாள்). இதற்கு முன் இந்திய வீரர் கார்கி பானர்ஜி 14 வயது, 165வது நாளில அறிமுகம் ஆனார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD