இந்திய பெண்கள் அணி அறிவிப்பு

Indian News

Indian News

Author 2019-09-28 00:40:33

img

புதுடில்லி: விண்டீசுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டது.

வரும் நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய பெண்கள் அணி, மூன்று ஒருநாள் (நவ. 1, 3, 6, இடம்: ஆன்டிகுவா), ஐந்து சர்வதேச 'டுவென்டி-20' (நவ. 9, 10ல் இடம்: செயின்ட் லுாசியா, நவ. 14, 17, 20ல் இடம்: கயானா) போட்டிகள் கொண்ட தொடரில் விண்டீஸ் பெண்கள் அணியுடன் மோதுகிறது.

இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 'டுவென்டி-20', ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அதே வீராங்கனைகள் மீண்டும் வாய்ப்பு பெற்றனர். ஒருநாள் அணியில் மட்டும் 16வது வீராங்கனையாக சுஷ்மா வர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

கேப்டனாக மிதாலி ராஜ் (ஒருநாள்), ஹர்மன்பிரீத் கவுர் ('டுவென்டி-20') தொடர்கின்றனர்.

ஒருநாள் அணி:மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, பூணம் ராத், ஹேமலதா, ஜுலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, மான்சி ஜோஷி, பூணம் யாதவ், எக்தா பிஷ்ட், ராஜேஷ்வரி கயக்வாத், தனியா பாட்யா (விக்கெட் கீப்பர்), பிரியா பூனியா, சுஷ்மா வர்மா.

'டுவென்டி-20' அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, தனியா பாட்யா (விக்கெட் கீப்பர்), பூணம் யாதவ், ராதா யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, அனுஜா பாட்டீல், ஷிகா பாண்டே, பூஜா, மான்சி ஜோஷி, அருந்ததி ரெட்டி.

பிக் பாஷ் சந்தேகம்

ஆஸ்திரேலியாவில், வரும் அக். 18 முதல் டிச. 8 வரை பெண்களுக்கான 'பிக் பாஷ் லீக்' கிரிக்கெட் ('டுவென்டி-20') தொடர் நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள அணிகளில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் ('சிட்னி தண்டர்ஸ்'), ஸ்மிருதி மந்தனா ('ஹோபர்ட் ஹரிகேன்ஸ்') ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஏதாவது ஒரு அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் (அக். 9-14) மற்றும் விண்டீஸ் தொடர் (நவ. 1-20) காரணமாக இவர்கள் மூவரும் பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN