இந்திய பெண்கள் அபாரம்

Indian News

Indian News

Author 2019-11-10 07:30:00

img

செயின்ட் லுாசியா: விண்டீசுக்கு எதிரான முதல் 'டுவென்டி-20' போட்டியில் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய பெண்கள் அணி 84 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி செயின்ட் லுாசியாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற விண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.நல்ல துவக்கம்: இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (73), ஸ்மிருதி மந்தனா (67) நல்ல துவக்கம் தந்தனர். பூஜா (0), தீப்தி சர்மா (3) ஏமாற்றினர். இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (21), வேதா கிருஷ்ணமூர்த்தி (15) அவுட்டாகாமல் இருந்தனர்.அபார பந்துவீச்சு: சவாலான இலக்கை விரட்டிய விண்டீஸ் அணிக்கு நடாஷா மெக்லீன் (0), ஹேலி மாத்யூஸ் (13) ஏமாற்றினர். செடீன் நேஷன் (10), கிஷோனா ஏ நைட் (12), ஸ்டேசி-ஆன் கிங் (13) நிலைக்கவில்லை. ஷிமைன் கேம்ப்பெல் (33) ஆறுதல் தந்தார்.விண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 101 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூணம் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.ஷபாலி சாதனைஅபாரமாக ஆடிய இந்தியாவின் ஷபாலி வர்மா, 49 பந்தில் 73 ரன்கள் எடுத்தார்.

இது சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் இவரது முதல் அரைசதம். இதன்மூலம் இவர், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் (15 ஆண்டு, 285 நாட்கள்) அரைசதமடித்த இந்தியர் என்ற புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் சச்சின் (16 ஆண்டு, 214 நாட்கள்) இச்சாதனை படைத்திருந்தார். இவர், 1989ல் பாகிஸ்தானுக்கு எதிராக பைசாலாபாத்தில் நடந்த டெஸ்டில் 59 ரன் எடுத்திருந்தார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN