இரட்டை சதம் விளாசி சஞ்சு சாம்சன் சாதனை!

Puthiyathalaimurai

Puthiyathalaimurai

Author 2019-10-13 16:11:39

img

விஜய் ஹசாரே போட்டியில், கேரள வீரர் சஞ்சு சாம்சன் இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே டிராபிக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. கர்நாடக மாநிலம் அலூரில் நேற்று நடந்த போட்டியில் கேரள -கோவா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கேரள அணியில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும் சச்சின் பேபியும் கோவா அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். அபாரமாக ஆடிய சஞ்சு சாம்சன், முதல் முறையாக இரட்டை சதம் விளாசினார். அவர், 129 பந்துகளில் 10 சிக்சர், 21 பவுண்டரிகளுடன் 212 ரன்களை குவித்தார்.

img

(உதவி: கிரிக்இன்போ)

மறுமுனையில் நின்ற சச்சின் பேபி 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் கேரளா 3 விக்கெட்டுக்கு 377 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கோவா அணி, 273 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது.
சஞ்சு சாம்சன், இரட்டை சதம் விளாசிய 6-வது இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார். ஏற்கனவே சச்சின், ஷேவாக், ரோகித் சர்மா (மூன்று முறை), ஷிகர் தவான், உத்தரகாண்டின் கவுஷல் ஆகிய இந்தியர்கள் இச்சாதனை பட்டியலில் உள்ளனர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN