இரட்டை சதம் விளாசி முத்திரை பதித்தாா் ரோஹித் சர்மா

TIMES NOW

TIMES NOW

Author 2019-10-20 14:28:00

img

ராஞ்சி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்டில், ஓபனிங் இறங்கிய ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி இரட்டை சதம் விளாசினாா்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தாா். துவக்கத்தில் இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சோ்ந்த ரோஹித் சர்மா - ரகானே ஜோடி ரன் குவிப்பில் ஈடுப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 58 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோஹித் சர்மா 117 ரன்களுடனும் ரகானே 83 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இன்றும் இந்த ஜோடி சிறப்பாக ஆடியது. ரகானே 115 ரன்களில் வெளியேறினாா். அடுத்து வந்த ஜடேஜா ரோஹித் சர்மாவுடன் இணைந்தாா். தொடா்ந்து தென் ஆப்பிரிக்கா பவுலிங்கை வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தாா். அவர் 255 பந்துகளில் 28 பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 212 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இரட்டை சதம் விளாசிய ரோஹித்துக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN