இரட்டை பதவியில் மிஸ்பா உல் ஹக் : சம்பளம் குறித்து பேச்சு

Indian News

Indian News

Author 2019-09-27 01:25:06

img

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில், இந்த அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளர் என இரண்டு பொறுப்புகளை வகித்து வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக மிஸ்பா தனது சம்பளம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நாளை இலங்கையுடன் நடைபெற உள்ள டெஸ்ட் தொடர், பல வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானில் சர்வதேச போட்டி நடைபெற்ற உள்ள நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தத்த மிஸ்பா உல் ஹக் கூறுகையில், வேலைகளைப் பெறுவதற்கு நான் எந்த மந்திரமும் செய்யவில்லை, சம்பளக் கோரிக்கைகள் எதுவும் நான் வைக்கவில்லை, முந்தைய பயிற்சியாளருக்கு கொடுப்பதையே எனக்குத் தருமாறு கேட்டேன் என கூறினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முதல் முறையாக – முன்னாள் கேப்டன் தனது இரட்டை பொருப்புக்காக வாங்கிக் கொண்டிருக்கும் சரியான சம்பளத்தை மிஸ்பா அல்லது பிசிபி வெளியிடவில்லை என்றாலும், ஜியோ நியூஸில் மிஸ்பா ரூ.28 லட்சம் (மாதாந்திர) ஒப்பந்தம் செய்யபட்டு உள்ளதாக கூறி உள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD