இலங்கை எதிர் பாகிஸ்தான்: 2ஆவது ODI போட்டி இன்று

Indian News

Indian News

Author 2019-09-30 03:45:07

img

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, கராச்சியில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடரின் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த முதலாவது போட்டி மழை காரணமாகத் கைவிடப்பட்டிருந்த நிலையில், அன்று பெய்த கடும் மழை காரணமாக மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்திருந்தன.

அந்தவகையில், மைதானத்தை கிரிக்கெட்டுக்கேற்ற விதத்தில் தயார்படுத்துவதற்கு மைதானப் பணியாளர்களுக்கு குறைந்தது இரண்டு முழு நாட்களாக தேவையென்ற நிலையிலேயே நேற்று நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது ஒரு நாளால் இன்றுக்கு பிற்போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய வானிலையானது மேம்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருநாள் சர்வதேசப் போட்டியானது பாகிஸ்தானுக்குத் திரும்புவதைக் காண இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.

எதிர்பார்க்கப்படும் இலங்கையணி: 1. லஹிரு திரிமான்ன (அணித்தலைவர்), தனுஷ்க குணதிலக, 3. அவிஷ்க பெர்ணான்டோ, 4. சதீர சமரவிக்கிரம (விக்கெட் காப்பாளர்), 5. ஒஷாட பெர்ணான்டோ, 6. ஷெகான் ஜெயசூரிய, 7. தசுன் ஷானக, 8. இசுரு உதான, 9. வனிடு ஹசரங்க, 10. லக்‌ஷன் சந்தகான், 11. நுவான் பிரதீப்.

எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி: 1. ஃபக்கர் ஸமன், 2. இமாம்-உல்-ஹக், 3. பாபர் அஸாம், 4. ஹரீஸ் சொஹைல், 5, சஃப்ராஸ் அஹ்மட் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), 6. ஆசிஃப் அலி, 7. இமாட் வசீம், 8. ஷடாப் கான், 9. வஹாப் றியாஸ், 10. மொஹமட் ஆமிர், 11. உஸ்மான் ஷின்வாரி.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD