இளம் பெண்கள் சாம்பியன்

Indian News

Indian News

Author 2019-10-30 08:54:39

img

கொழும்பு: வளர்ந்து வரும் பெண்கள் அணிகளுக்கான முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கொழும்பில் நடந்தது. பைனலில் இந்தியா, இலங்கை மோதின. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. தனுஸ்ரீ அதிகபட்சம் 47 ரன் எடுத்தார்.

மழை காரணமாக மாற்றப்பட்ட இலக்கை (35 ஓவரில் 149 ரன்) துரத்திய இலங்கை அணிக்கு மாதவி (39), மதுஷிகா (25) மட்டும் கைகொடுத்தனர். இலங்கை அணி 34.3 ஓவரில் 135 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை கைப்பற்றியது. இந்தியா சார்பில் தனுஜா 4, கேப்டன் தேவிகா 4 விக்கெட் சாய்த்தனர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN