ஈடன் கார்டன் 'ரெடி' *பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு...

Indian News

Indian News

Author 2019-10-31 04:41:04

img

கோல்கட்டா: இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த வேகமாக தயாராகி வருகிறது ஈடன் கார்டன் மைதானம்.

கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானம் ஒவ்வொன்றிலும் புதுமை படைத்து வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனல் முதன் முறையாக இங்கிலாந்துக்கு வெளியே 1987, நவ. 8ல் ஈடன் கார்டனில் நடந்தது. 1999, பிப். 16ல் முதல் ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் 2016, ஜூன் 18-21ல் முதன் முறையாக நான்கு நாள் பகலிரவு போட்டி இங்கு நடந்தது.

தற்போது வரும் நவ. 22-26ல் இந்தியாவில் முதல் பகலிரவு டெஸ்ட் இங்கு நடக்க உள்ளது. போட்டியின் பயன்படுத்த 'பிங்க்' (இளஞ்சிகப்பு) நிறத்தினாலான, 72 பந்துகள் வாங்கப்பட உள்ளன.

கோல்கட்டா மைதானம், நகரில் எங்கு திரும்பினாலும் 'பிங்க்' நிறமாக இருக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

காத்திருக்கும் சிக்கல்

இதனிடையே பகலிரவு டெஸ்டில் பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் என இருவருக்கும் சிக்கல் காத்திருக்கிறது. கோல்கட்டா ஆடுகளம் தற்போது வேகங்களுக்கு கைகொடுக்கிறது. பகலிரவு டெஸ்டில் பயன்படுத்தப்படும் 'பிங்க்' நிற பந்துகள், சிவப்பு பந்துகளை விட அதிகமாக 'சுவிங்' ஆகும். மாலை மயங்கும் நேரத்தில் பந்துகளை கணிப்பதில் பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் உள்ளது.

மாறும் பந்து

நவம்பர் மாதம் என்பதால் கோல்கட்டாவில் இரவில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும். இதனால் பந்துகள் விரைவில் 'சோப்' போல வழுவழுவென ஆகிவிடும் என்பதால் பவுலர்களுக்கும் சிக்கல் தான். இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகம் என்பதால், வழக்கமாக தேநீர் இடைவேளைக்குப் பின் 'டிக்ளேர்' செய்வது போல, இதில் செய்ய மாட்டர்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) முன்னாள் ஆடுகள பராமரிப்பாளர் தல்ஜித் சிங் கூறுகையில்,''பனிப்பொழிவு பெரிய தொல்லை தான். ஆடுகளத்தில் புற்கள் நீளத்தை குறைவாக பராமரித்தால், பந்துகள் பாதிப்பை ஓரளவுக்கு குறைக்கலாம். மைதான பகுதிகளில் சற்று அதிக புற்கள் இருந்தால் பனியை உறிஞ்சும்,'' என்றார்.

போட்டி எப்போது

பகலிரவு டெஸ்ட் மதியம் 1:30 முதல் 9:00 மணி வரை நடக்கும். 4:05 மணிக்கு தேநீர் இடைவேளை, 6:20 மணிக்கு உணவு இடைவேளை விடப்படும்.

சிந்துவுக்கு பாராட்டு

பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பாட்மின்டன் வீராங்கனை சிந்து, ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD