உங்க இஷ்டத்துக்கு ஆட முடியாது.. டோனியை விளாசிய கம்பீர்

Lankasri

Lankasri

Author 2019-09-27 13:51:03

இந்திய நாட்டுக்காக விளையாடும் போது தன் இஷ்டத்துக்கு முடிவு செய்ய முடியாது என டோனியை முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் சாடியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட கம்பீர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் எப்போதுமே ஒன்றில் தெளிவாக இருக்கிறேன். ஓய்வு அறிவிப்பது என்பது தனிப்பட்ட ஒருவரது தெரிவு. அணித்தேர்வுக்குழுவினர்தான் டோனியிடம் பேசி எதிர்கால முடிவு என்ன திட்டம் என்ன என்பதை விவாதிக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்காக ஆடும் ஒரு வீரர் தன் இஷ்டத்துக்கு ஒரு தொடரில் ஆடுவேன், அடுத்த தொடரில் விலகுவேன் என்று தொடர்களை தன் இஷ்டத்துக்கு தேர்வு செய்ய முடியாது என்றார்.

அதே வேளையில் ரிஷப் பந்த் பற்றி கூறும்போது, ரிஷப் பந்த்தின் மீது அழுத்தம் கொடுப்பது தவறானது, அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

பந்த்தின் ஷாட் தேர்வு எப்போதும் சரியாகவே இருந்து விடாது என்பதை அணி நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும். அவரது ஆட்டம் சூடுபிடிக்கும் நாளில் அவர் வெற்றி வீரர்.

பார்மில் இல்லாத வீரரிடம் அணித்தலைவர் கோஹ்லி மட்டுமின்றி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பேசி ஆலோசனை வழங்க வேண்டும். அது அவருக்கு தனது ஆட்டத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்றார்.

டிராவிட் தொடர்பில் பேசிய காம்பீர், என்சிஏ-வின் பயற்சியாளராக அவர் வந்தால், நாட்டிற்கும், இளைஞர்களுக்கும் சிறப்பாக அமையும் என்றார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD