உமேஷ், ஷமி பந்து வீச்சில் திணறும் தென்னாப்பிரிக்கா..!

Indian News

Indian News

Author 2019-10-12 15:41:10

img

இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழந்து 601 ரன்களுக்குபோது டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 254 , மயங்க் அகர்வால் 108 , ஜடேஜா 91 ரன்கள் எடுத்தனர். பின்னர் நேற்று தொடங்கி தனது முதல் இன்னிங்சை தொடங்கி தென் ஆப்பிரிக்கா அணி நேற்றைய ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழந்து 36 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 53 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

இந்திய அணியில் உமேஷ் 3 விக்கெட்டும் , முகமது ஷமி 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD