உலக கோப்பை: நெதர்லாந்து தகுதி

Indian News

Indian News

Author 2019-10-30 08:54:39

img

துபாய்: ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றது.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் (அக். 18-நவ.15) ஐ.சி.சி., 'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 6 இடங்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்சில் தகுதிச் சுற்று நடக்கிறது. இதற்கான, முதல் 'பிளே ஆப்' போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), நெதர்லாந்து அணிகள் மோதின.

முதலில் விளையாடிய யு.ஏ.இ., அணிக்கு குளோவர் தொல்லை தந்தார்.

இவரது 'வேகத்தில்' பரித் (5), வாகத் அகமது (19) உள்ளிட்டோர் சிக்கினர். அதிகபட்சமாக கேப்டன் அகமது ராஜா 22 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஏமாற்ற, யு.ஏ.இ., அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்தது.

எளிய இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணி 15.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம், உலக கோப்பை தொடருக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றது. ஏற்கனவே, அயர்லாந்து, பப்புவா நியூ கினியா அணிகள் முன்னேறின.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD