உலக சாதனையுடன் ரோஹித் ஷர்மா அட்டகாசம்! வங்கதேசம் கதறல்!

Indian News

Indian News

Author 2019-11-08 00:50:05

img

இந்தியா வங்கதேசம் அணிகள் இடையேயான இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா ஷிகர் தவான் ஜோடி அபாரமாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் முதல் விக்கெட்டுக்கு குவித்தது. இந்தப் போட்டியின் போது இந்த ஜோடி உலக சாதனை படைத்ததுடன், ரோகித் சர்மா தனிப்பட்ட முறையில் பல சாதனைகள் படைத்து அசத்தியுள்ளார்.

அதன்படி 20 ஓவர் போட்டிகளில் அதிகமுறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்த ஜோடியில் முதல் ஜோடியாக ரோகித் சர்மா ஷிகர் தவான் 4 முறை எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்கள்.

டேவிட் வார்னர் வாட்சன், மார்டின் குப்டில் கனே வில்லியம்சன், ரோஹித் சர்மா விராட் கோலி, மார்டின் குப்டில் மொன்றோ ஆகியோர் தலா 3 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை தற்போது ரோஹித் ஷர்மா தவான் ஜோடி முறியடித்துள்ளது

சிக்ஸர் அடிப்பதில் வல்லவரான ரோகித் சர்மா கடந்த மூன்று வருடங்களாக சர்வதேசப் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு 65 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருந்த அவர் 2018 ஆம் ஆண்டு 74 சிக்ஸர்களுடன் முதலிடத்தைப் பிடித்தார். இந்த வருடம் இந்த போட்டியில் 6 சிக்சர்கள் அடித்துதுடன் 66 சிக்ஸர்களை அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் அதிக சிக்சர் அடித்த சர்வதேச வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

20 ஓவர் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சாதனை மன்னனாக கருதப்படுபவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில். அவரின் சாதனையையும் இந்த போட்டியில் முறியடித்துள்ளார் ரோஹித். 20 ஓவர் போட்டிகளில் 75க்கும் அதிகமான ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் இதுவரை எட்டு முறை அடித்துள்ளார். அந்த சாதனையை முறியடித்த ரோகித் சர்மா இந்த போட்டியுடன் பத்து தடவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் நான்கு சதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா நடித்துள்ள 6 சிக்ஸர்கள் மூலம் அவர் இரண்டு சாதனைகளை முறியடித்துள்ளார். அதாவது 20 ஓவர் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை இதுவரை வைத்திருந்த மகேந்திர சிங் தோனியின் 34 சிக்ஸர்கள் சாதனையை முறியடித்துள்ளார். மேலும் வங்கதேச அணிக்கு எதிராக இதுவரை சாமுவேல்ஸ் மற்றும் வல்லார் அடித்திருந்த 18 சிக்ஸர்கள் சாதனையையும் ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

ரோகித் சர்மா இந்த போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் அதிக 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த அணியின் கேப்டன் விராட் கோலி 22 அரைசதங்களுடன் முதல் இடத்தில் இருக்க, ரோகித் சர்மா 18 அரை சதங்கள் 4 சதங்களுடன் அவருடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதேபோல அதிக அரைசதம் அடித்த இந்திய கேப்டன் வரிசையிலும் கோலியின் 6 அரைசதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார்.

20 ஓவர் போட்டிகளில் அதிக 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்திருந்த ஜோடியாக இரண்டாமிடத்தில் ஷிகர் தவான் ரோகித் சர்மா ஜோடி முன்னேறியுள்ளது. அவர்கள் இருவரும் இதுவரை பதினொரு முறை 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ரோஹித் சர்மா குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த போட்டிகளில் இந்தப் போட்டியானது இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அவர் இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 22 பந்துகளில் அதிரடி அரைசதம் அடித்த நிலையில் தற்போது 23 பந்துகளில் வங்கதேசத்துக்கு எதிராக அரைசதம் அடித்து அவருடைய அதிவேக அரைசதங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது

Fewest balls to 50 for Rohit Sharma (T20Is) #INDvBAN
22 vs WI Lauderhill 2016
23 vs SL Indore 2017
23 vs Ban Rajkot 2019 *
28 vs Eng Bristol 2018
28 vs NZ Auckland 2019

ஒரே போட்டியில் ஐந்துக்கும் அதிகமான சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் கெயில், காலின் முன்றொ 9 முறை எடுத்து இருக்கையில் ரோகித் சர்மா 8 முறை அடித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD