எங்களின் அடுத்த இலக்கு இதுதான்: விராட் கோஹ்லி

Lankasri

Lankasri

Author 2019-10-19 14:05:27

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, தங்கள் அணியின் அடுத்த இலக்கு குறித்து தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பல வெற்றிகளை குவித்து வருகிறது. தற்போது நடைபெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கிண்ண தொடர் குறித்து விராட் கோஹ்லி பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் சரியான Combination அணியை பெறுவதில் தான் முழுக்கவனம் செலுத்த இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கிண்ண தொடர் மீது நாங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்த இருக்கிறோம். அடுத்த 12 மாதங்கள் முடிந்த அளவிற்கு மிகப்பெரிய தொடருக்கான வீரர்களை தயார் செய்வது முக்கியமானது.

img

டி20 கிரிக்கெட் போட்டிக்கான அணியில் இடம்பெறும்போது, அவர்களுடைய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி உலகக்கிண்ண அணியில் இடம்பெற வேண்டும் என்ற உத்வேகம் எங்கள் வீரர்களிடம் உள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு செல்லும்போது சரியாக அமைந்துள்ள Combination அணியுடன் செல்ல விரும்புகிறோம்.

அறிமுகம் செய்யப்பட்ட வருடத்தில் டி20 உலகக்கிண்ணத்தை இந்தியா வென்றது. அப்போது டி20யின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சற்று தெரியாமல் இருந்தது. அதன்பின் மிகப்பெரிய கிரிக்கெட்டாக உருவெடுத்தது.

டி20 உலகக்கிண்ணத்தை வென்ற 2வது இந்திய அணித்தலைவர் என்பது மிகப்பெரிய கவுரவமாக இருக்கும். அடுத்த வருடம் நடைபெறும் பெண்களுக்கான டி20 உலகக்கிண்ணத்தையும் இந்தியா வெல்லும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN