எனக்கு சிஎஸ்கே டீமை பிடிக்காது.. அதுக்கு காரணம்..

C SHANMUGASUNDARAM

C SHANMUGASUNDARAM

Author 2019-09-30 13:48:42

மும்பை : சமீபத்தில் தடையில் இருந்து விடுபட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிடிக்காது என அதற்கு ஒரு விசித்திர காரணத்தை கூறி வம்பில் சிக்கிக் கொண்டுள்ளார். சர்ச்சைகளை போர்த்திக் கொண்டு தூங்கும் கிரிக்கெட் வீரர் யார் என்றால் ஸ்ரீசாந்த் என்று தான் கூற வேண்டும்.

ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சிறையில் இருந்து, பின் தடை விதிக்கப்பட்டு இருந்தார். அந்த வழக்கில் இருந்து சமீபத்தில் நிவாரணம் பெற்று, கிரிக்கெட் ஆட விதிக்கப்பட்ட தடையில் இருந்து மீண்டார் ஸ்ரீசாந்த்.

imgThird party image reference

மீண்டும் கிரிக்கெட் ஆசை

தற்போது 36 வயதாகும் ஸ்ரீசாந்த் தான் தடையில் இருந்து மீண்டதால், மீண்டும் இந்திய அணிக்கு கிரிக்கெட் ஆட விரும்புவதாக கூறி வருகிறார். அது சாத்தியமா? என்பது தெரியவில்லை.

imgThird party image reference

மனம் திறந்தார்

தடையில் இருந்து மீண்டதால் இனி எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருப்பார் என்று பார்த்தால், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் இது வரை யாருக்கும் தெரியாத சில விஷயங்களை தானாகவே கூறி சிக்கி இருக்கிறார்.

imgThird party image reference

பேடி அப்டன் கிளப்பிய சர்ச்சை

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவிலும், ஸ்ரீசாந்த் இடம் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவிலும் இடம் பெற்று இருந்தவர் பேடி அப்டன். அவர் தன் சுயசரிதை புத்தகத்தில் ஸ்ரீசாந்த் குறித்த ஒரு சர்ச்சையை பற்றி குறிப்பிட்டு இருந்தார்.

என்ன சொன்னார்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிராவிட் தலைமையில் ஸ்ரீசாந்த் ஆடிய போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் ஆடவில்லை என்பதை அறிந்து டிராவிட் மற்றும் அப்டனை திட்டியதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டு இருந்தது.

ஸ்ரீசாந்த் மறுப்பு

அதாவது, ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்ஸிங் செய்யும் நோக்கத்தில் தான் அன்று அப்படி நடந்து கொண்டார் என்கிற ரீதியில் அவர் கூறி இருந்தார். அதை பேட்டியில் மறுத்த ஸ்ரீசாந்த், தான் அன்று அப்படி நடந்து கொள்ள என்ன காரணம் என்பதை பற்றி கூறினார்.

imgThird party image reference

சிஎஸ்கேவை பிடிக்காது

தனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிடிக்காது என்றும், அதனால் தான் அன்று அந்த அணிக்கு எதிராக ஆட வேண்டும் என்ற நோக்கத்தில் பல முறை அப்டனிடம் தன்னை அணியில் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்ததாக கூறி உள்ளார்.

imgThird party image reference

இது எல்லோருக்கும் தெரியும்

மேலும், எல்லோருக்கும் நான் எந்த அளவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெறுப்பேன் என்பது தெரியும். சிலர் எனக்கு தோனியை பிடிக்காது, உரிமையாளர் சீனிவாசனை (முன்னாள் பிசிசிஐ தலைவர்) பிடிக்காது என்பார்கள். ஆனால், அது உண்மை அல்ல.

மஞ்சள் பிடிக்காது

ஆனால், நான் மஞ்சள் நிறத்தை வெறுக்கிறேன். அதே காரணத்தால் தான் நான் ஆஸ்திரேலிய அணியை வெறுத்தேன். மேலும், நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி இருந்தேன். அதனால் தான் நான் அந்த அணிக்கு எதிராக விளையாட விரும்பினேன் என்றார்.

இது பெரிய ஏமாற்றம்

மேலும், தன்னை காவல்துறை துன்புறுத்தியதை விட இந்த குற்றச்சாட்டு மோசமாக இருந்ததாகவும், இது தனக்கு பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தான் அது போல அப்டனிடம் நடந்து கொள்ளவில்லை என்றும் கூறினார் ஸ்ரீசாந்த்.

வாயை கொடுத்து வம்பில்..

ஸ்ரீசாந்த்துக்கு சிஎஸ்கே அணியை பிடிக்காது என்பதோ, அதற்கு தோனி, சீனிவாசன் தான் காரணம் என மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதோ இதுவரை வெளிவராத தகவல்கள். அதை தானாகவே கூறி இருக்கும் ஸ்ரீசாந்த், மஞ்சள் நிறம் பிடிக்காது என்பதால் சிஎஸ்கே அணியை பிடிக்காது என்ற நம்ப முடியாத வாதத்தையும் கூறி இருக்கிறார்.

imgThird party image referenceREAD SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD