என்ன ‘தல’ கடைசியில இந்த நிலைமைக்கு வந்துட்டியே!

srini

srini

Author 2019-10-07 15:29:58

imgThird party image reference

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கிரிகெட் தொடரில் ஆமை வேக ‘பேட்டிங்’ காரணமாக கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.

ஓய்வு...

இதையடுத்து இரண்டு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்டு, ராணுவ பணியில் கவனம் செலுத்திய தோனி, தற்போது வீடு திரும்பி தன் குடும்பத்தாருடன் பொழுதை போக்கி வருகிறார். அனைவரும் தோனி எப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர் மௌனம்...

ஆனால் தோனியோ விமர்சனங்களையும் சரி, ஓய்வு வதந்தியையும் சரி கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. மாறாக காஸ்லி காரில் ரைடு, கால்பந்து என ஜாலியாக சுற்றி வருகிறார்.

எதிர்கால திட்டம்...

இதற்கிடையில் தனது எதிர்கால திட்டம் குறித்து தோனி பிசிசிஐ தேர்வுக்குழுவினரிடம் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் டி-20, ஒருநாள் கிரிக்கெட்டில் தோனிக்கு மாற்று வீரராக வந்த ரிஷப் பந்த், படுசொதப்பு சொதப்ப, ரசிகர்கள் மீண்டும் தோனி தேவை என ட்விட்டரில் கூவி வருகின்றனர்.

அறக்கட்டளை போட்டி...

இதற்கிடையில் தோனி, மும்பையில் அறக்கட்டளை சார்பாக நடந்த கால்பந்து போட்டியில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்டோருடன் விளையாடியுள்ளார். தோனி கால்பந்து விளையாடிய வீடியோ மற்றும் போட்டோக்கள், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒருவேளை இதான் பிளானா....

ஒருவேளை சர்வதேச கிரிக்கெட்டுக்கு பை பை சொல்லிவிட்டு, தனது முதல் காதலான கால்பந்து பக்கம் செல்ல தோனி பிளான் செய்துவிட்டாரோ என்றும் சிலர் கேலியாக தோனியை விமர்சித்து வருகின்றனர்.

உடனே முடிவு...

ஒரு புறம் விமர்சனம், மறுபுறம் ஆதரவு என மாறி மாறி இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் என்றாவது ஒருநாள் ஓய்வு பெற்றுத்தான் ஆக வேண்டும். இதை நன்கு உணர்ந்த சீனியர் வீரர் தோனி, விரைவில் இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கத்திலோ அல்லது தனக்கு வயது அதிகரித்துக்கொண்டோ இருப்பதை உணர்ந்தோ விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD