ஏழாமிடத்துக்கு முன்னேறினார் பெக்லுவாயோ

Indian News

Indian News

Author 2019-09-25 22:45:05

img

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான இன்று வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் ஏழாமிடத்துக்கு தென்னாபிரிக்காவின் சகலதுறைவீரர் அன்டிலி பெக்லுவாயோ முன்னேறியுள்ளார்.

இந்தியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஒரு ஓவருக்கு 6.85 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய நிலையிலேயே ஒன்பதாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை பெக்லுவாயோ அடைந்துள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே பங்கேற்ற முத்தரப்பு இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஒரு ஓவருக்கு 6.06 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், 38ஆம் இடத்திலிருந்து 29 இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

இந்நிலையில், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து பங்கேற்ற முத்தரப்பு இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில் 145 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஒரு ஓவருக்கு 7.22 ஓட்டங்களை வழங்கி நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஸ்கொட்லாந்தின் றிச்சி பெரிங்டன், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஆறாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்கள் பின்வருமாறு

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN