ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை: ரோஹித், தவன் முன்னேற்றம்

Indian News

Indian News

Author 2019-09-26 04:35:00

img

ஐசிசி வெளியிட்ட டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில், இந்திய வீரர் ரோஹித் சர்மா 8ஆவது இடத்துக்கும், தவன் 13ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டத்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் விராட் கோலி, 11ஆவது இடத்தில் உள்ளார்.
ரோஹித், இங்கிலாந்து வீரர் அலெக் ஹேல்ஸூடன் 8ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ஷிகர் தவன் 13ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். லோகேஷ் ராகுல் 10ஆவது இடத்துக்கு சரிந்துள்ளார்.
பாகிஸ்தானின் பாபர் ஆஸம் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் கிலென் மாக்ஸ்வெல் 2ஆவது இடத்திலும், நியூஸிலாந்து வீரர் காலின் மன்றோ 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் இல்லை.
இந்திய வீரர் குல்தீப் யாதவ் 14ஆவது இடத்தில் உள்ளார். ஆப்கன் வீரர் ரஷீத் கான் முதலிடத்தில் உள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN