ஐதராபாத் அணி வெற்றி * ஐ.எஸ்.எல்., தொடரில் அபாரம்

Indian News

Indian News

Author 2019-11-03 07:41:01

img

ஐதராபாத்: ஐ.எஸ்.எல்., லீக் போட்டியில் ஐதராபாத் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., தொடரின் ஆறாவது சீசன் தற்போது நடக்கிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் கேரளா, அறிமுக அணியான ஐதராபாத்தை சந்தித்தது. போட்டியின் 34வது நிமிடம் கேரளா அணியின் ராகுல், முதல் கோல் அடித்தார். முதல் பாதியில் கேரளா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 54வது நிமிடம் ஐதராபாத் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதில் மார்கோ கோல் அடித்தார். 81வது நிமிடம் மார்செலினோ ஒரு கோல் அடிக்க, ஐதராபாத் ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் ஐதராபாத் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஐ.எஸ்.எல்., தொடரில் ஐதராபாத் பெற்ற முதல் வெற்றி இது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD